மாணவியின் கோரிக்கைக்கு அமைய இரண்டே மணி நேரத்தில் அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்த ஜனாதிபதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாணவியின் கோரிக்கைக்கு அமைய இரண்டே மணி நேரத்தில் அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்த ஜனாதிபதி!

திருகோணமலை, மதவாச்சி பாடசாலை மாணவியொருவர் பாடசாலை விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்து தருமாறு ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைக்கு உடனடி தீர்வு கிடைத்துள்ளது.


கோமரங்கடவல பிரதேச செயலாளர் பிரிவில் கிவுலேகடவல வித்தியாலயத்தில் கடந்த சனியன்று (27) இடம்பெற்ற “கிராமத்துடன் உரையாடல்“ நிகழ்ச்சித்திட்டத்தின் போதே இந்த மாணவி மேற்படி கோரிக்கையை முன்வைத்திருந்தார்.


ஜனாதிபதி அந்த சந்தர்ப்பத்திலேயே விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்யும் பணியை இராணுவத்தினரிடம் ஒப்படைத்தார்.


மாணவியின் கோரகையை நிறைவேற்றும் வகையில் இராணுவத்தின் பொறியியல் பிரிவு இரண்டு மணி நேரத்திற்குள் விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்துள்ளது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.