கொழும்பு ICBT Campus நிறைவேற்று அதிகாரியினால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட தமிழ்ப் பெண்! பொலிஸில் புகார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பு ICBT Campus நிறைவேற்று அதிகாரியினால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட தமிழ்ப் பெண்! பொலிஸில் புகார்!



தமிழ் நாய் தானே நீ என்ன ஒழுக்கம் மானத்தை பற்றி கதைக்கிறாய் ? பிரபாகரனின் மகள் போல இருக்கிறாய் குண்டு வைக்கவும் தயங்க மாட்டாய், இவ்வாறெல்லாம் தமிழ் பெண்ணை பார்த்து திட்டியுள்ளார்
.


கொழும்பு ICBT Campus இல் தற்போது பிரதான நிறைவேற்று அதிகாரியாக (CEO) கடமையாற்றும் டாக்டர் சம்பத் கன்னங்கரா (Dr. Sampath Kannangara) தனது தமிழ்ப் பெண் செயலாளரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸில் புகார் ஒன்று பதிவாகியுள்ளது.


மேற்படி சம்பவத்தைத் தொடர்ந்து 10/02/2021 அன்று பம்பலப்பிட்டி போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் பெண் செயலாளர் புகார் கொடுத்துள்ளார். (WCIB /239/33)


மேலும் தகுந்த சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி இலங்கை பெண்கள் மற்றும் சிறுவர்கள் பணியகத்திலும் (Women & Child Bureau, Sri Lanka) முறைப்பாடு செய்துள்ளார்.


இந்த புகார் குறித்து பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரித்து வருவதாகவும், ஆனால் சம்பந்தப்பட்ட பிரதான நிறைவேற்று அதிகாரியோ (CEO) இன்னும் விசாரிக்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.


http://www.lankapost.com/icbt-campus-ceo-sexually-assaults-the-secretary/


இது கொழும்பு ICBT Campus இல் நடந்த இரண்டாவது பாலியல் துஷ்பிரயோக சம்பவமாகும். ஏற்கனவே 2017ல் பிரதான நிறைவேற்று அதிகாரியின் தமிழ்ப் பெண் செயலாளரை, சந்தைப்படுத்தல் பணிப்பாளர் (Director Marketing) பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்து தற்போது வழக்கு விசாரணை Colombo Magistrate Court III இல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


2017 இல் இடம்பெற்ற சம்பவம்


ICBT Campus நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் அனுர கமகே  (Director Marketing) 2017 இல் பிரதான நிறைவேற்று அதிகாரியின் தமிழ் பெண் செயலாளரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்து அப்பெண் செயலாளரின் உடனடி புகாரை அடுத்து பம்பலபிட்டிய போலீஸினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அனுர கமகே  கைது செய்யப்பட்டு தற்போது Colombo Majestrate Courts III இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு (வழக்கு இலக்கம் B/81339) நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


$ads={1}


கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்திருக்கும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் அனுர கமகே (Anura Gamage) எந்தவித ஒழுக்காற்று நடவடிக்கையும் ICBT Campus இனால் மேற்கொள்ளப்படாமல் தொடர்ந்தும் ICBT Campus இல் கடைமை செய்ய அனுமதித்திருப்பது நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் (Director Marketing) என்கிற வகையில் அங்கு கல்வி பயிலும் பெண் மாணவர்களுக்கு மேலும் அச்சுறுத்தலும் ICBT Campus இன் பெயருக்கும் இழுக்காகும் என குறித்த பாதிக்கப்பட்ட  பெண் தெரிவித்தார்.


https://srilankamirror.com/biz/14949-icbt-marketing-director-sexually-molested-ceo-s-secretary 


மூலம்- பட்டி நியூஸ்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.