வத்தளை மதஸ்தலம் ஒன்றில் திடீர் தீப்பரவல்!

வத்தளை மதஸ்தலம் ஒன்றில் திடீர் தீப்பரவல்!

வத்தளை- ஹேகித்த பகுதியிலுள்ள ஆலயமொன்றில் திடீர் தீப்பரவல், இன்று (06) காலை 9.45 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

குறித்த ஆலயத்தின் இரண்டாவது மாடியில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த கொழும்பு மாநகர தீயணைப்பு பிரிவு, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்பாடத நிலையில் வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.