கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கை!

கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கை!


ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை செய்து அறிக்கை கையளித்துள்ள ஆணைக்குழுவின் பரிந்துரைகள் குறித்து தனக்கு விளக்கம் அளிக்கும்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் கோரியுள்ளார்.


விசேட கடிதமொன்றின் மூலம் கர்தினால் இந்த கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார்.


2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்கள் பற்றி விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு, கடந்த முதலாம் திகதி அதன் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்திருந்தது.


மேலும் தேசிய சுதந்திர தின நிகழ்விலும் இதுபற்றி கருத்து வெளியிட்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிச்செல்ல இடமளிக்கமாட்டேன் என்கிற வாக்குறுதியையும் அவர் வெளியிட்டார்.


இந்நிலையில்தான் கர்தினால் ரஞ்ஜித், ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிவைத்திருப்பதுடன், குறித்த அறிக்கையின் பிரதிகளைத் தன்னிடம் வழங்கும்படியும் கேட்டுள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.