கொரொனாவினை விட மனித குலத்துக்கு காத்திருக்கும் மேலும் இரு பேரழிவுகள்! -பில் கேட்ஸ்

கொரொனாவினை விட மனித குலத்துக்கு காத்திருக்கும் மேலும் இரு பேரழிவுகள்! -பில் கேட்ஸ்

இன்னும் இரண்டு பேரழிவுகளை சந்திக்க மனித குலம் தயாராக இருக்க வேண்டும் என்று மைக்ரோசாப்ட் நிறுவன நிறுவனர் பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார்.

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இப்போது உலகின் பல்வேறு நாடுகளில் பல லட்சம் உயிர்களை எடுத்து வருகிறது.

இப்படிப்பட்ட வைரஸ் குறித்து கடந்த 2015ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கணித்திருந்தார்.

அவரின் அந்த வீடியோ இந்த கொரோனா காலகட்டத்தில் அதிகமாக பகிரப்பட்டது. கடந்த 2015ஆம் ஆண்டிலேயே உலக நாடுகளை பில்கேட்ஸ் எச்சரித்த போதும் அதை பெரிதாக எடுத்து கொள்ளாததன் விளைவை இன்று உலக நாடுகள் அனைத்தும் சந்தித்து வருகின்றன.

இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கு முன்பே எப்படி கொரோனா போன்றதை கணித்தீர்கள் என கேட்ட கேள்விக்கு பில் கேட்ஸ், சுவாச வைரஸ்கள் ஒவ்வொன்றாக தோன்றுகின்றன. இவை மிகவும் ஆபத்தானவை. எபோலா போன்ற தொற்றுக்காக நீங்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போதே பிறருக்கும் பரவி விடுகிறது என்றார்.

மனிதர்கள் தயாராகாத வேறு பேரழிவுகள் ஏதேனும் இருக்கிறதா என்ற கேள்விக்கு பில் கேட்ஸ், இரண்டு பேரழிவுகள் இருப்பதாக குறிப்பிட்டார்.

முதலில் பருவநிலை மாற்றம். கொரோனாவில் இறந்தவர்களைக் காட்டிலும் ஒவ்வொரு ஆண்டும் இனி பருவநிலை மாற்றத்தால் கூடுதலான உயிரிழப்புகள் ஏற்படும். அடுத்த பேரழிவை பற்றி பேசுவதை மக்கள் விரும்ப மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.