2021 ஐ.பி.எல் போட்டியில் 31 இலங்கை வீரர்கள் ஏலத்தில்!

2021 ஐ.பி.எல் போட்டியில் 31 இலங்கை வீரர்கள் ஏலத்தில்!

கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்ற நிலையில், 14வது சீசன் வரும் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்நிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 18-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

ஐபிஎல் ஏலத்திற்கு 1,097 வீரர்கள் பதிவு செய்து உள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த வீரர்கள் ஆவார்கள்.இதில் 814 இந்திய வீரர்களும் 283 வெளிநாட்டு வீரர்களும் பதிவுசெய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 18 ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ள 1,097 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

வீரர்கள் பதிவு காலக்கெடு நேற்றுடன் முடிவுற்றது. பதிவு செய்துள்ள 283 வெளிநாட்டு வீரர்கள் விவரம் பின்வருமாறு:

மேற்கிந்திய தீவுகள்- 56 வீரர்கள்.
ஆப்கானிஸ்தான் -30 வீரர்கள்.
அவுஸ்திரேலியா - -42 வீரர்கள்.
வங்காள தேசம் - 5 வீரர்கள்.
இங்கிலாந்து - 21 வீரர்கள்.
அயர்லாந்து - 2 வீரர்கள்.
நேபாளம் - 8 வீரர்கள்.
நியூசிலாந்து- 29 வீரர்கள்.
ஸ்காட்லாந்து- 7 வீரர்கள்.
தென்னாப்பிரிக்கா- 38 வீரர்கள்.
இலங்கை -31 வீரர்கள்.
ஐக்கிய அரபு அமீரகம் -9 வீரர்கள்.
அமெரிக்கா- 2 வீரர்கள்.
ஜிம்பாப்வே- 2 வீரர்கள்.
நெதர்லாந்து - 1 வீரர்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.