இஸ்லாமிய தீவிரவாதத்தினை பற்றி பேசியமைக்காக ஏராளமான துன்பங்களை அனுபவித்த எனக்கு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் குற்றம் சாட்டுகின்றனர் - ஞானசார தேரர் கண்டனம்!

இஸ்லாமிய தீவிரவாதத்தினை பற்றி பேசியமைக்காக ஏராளமான துன்பங்களை அனுபவித்த எனக்கு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் குற்றம் சாட்டுகின்றனர் - ஞானசார தேரர் கண்டனம்!

இஸ்லாமிய தீவிரவாதத்தினை பற்றி பேசியமைக்காகவே ஏராளமான துன்பங்கள், அவமானங்கள் மற்றும் சிறைவாசம் ஆகியவற்றை அனுபவித்தது நாட்டு மக்களை காப்பற்றுவதற்கே அன்றி ஈஸ்டர் தாக்குதலுக்கான குற்றவாளியாகுவகு அல்ல என பொது பல சேன அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று (16) தெரிவித்துள்ளார்.

இவ்வாறான தீவிரவாதத்தின் உண்மைத் தன்மையினை முழு நாடும் புரிந்து கொள்ள வேண்டும், அதைப் பற்றி பேசாது, அலி சப்ரி வீசும் பந்துகளை ஆடுவது எந்த அர்த்தமும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வெளியான இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனை பிற நபரினால் பார்வையிட முடியாது உள்ளது. இதனை மக்கள் எவ்வாறு தெரிந்து கொள்வது எப்படி எனவும் கேள்வி எழுப்பினார். 

இதில் ஏதோ குழப்பம் நிகழ்ந்துள்ளது. தமது அரசியல் இலாபத்திற்காக யாரோ ஒருவர் ஆணைக்குழுவினுள் நுழைந்து உள்ளாரா என்று எமக்கு தெரியாது. எதையும் எதிர்க்கொள்ள நாம் தாயாராக இருப்பதாகவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post