சுக்ரா போன்ற பிள்ளைகளையே முஸ்லிம் சமூகத்திடம் இந்நாடு கேட்கிறது! ஞானசார தேரர்

சுக்ரா போன்ற பிள்ளைகளையே முஸ்லிம் சமூகத்திடம் இந்நாடு கேட்கிறது! ஞானசார தேரர்


தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இலட்சாதிபதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 20 லட்சங்களை வென்ற காலி பகுதியை சேர்ந்த முஸ்லிம் மாணவி சுக்ரா முனவ்வரை பலரும் சந்தித்து வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 


இந்நிலையில், இன்றைய தினம் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சுக்ராவின் வீடு தேடி சென்று வாழ்த்து தெரிவித்தார். அவர் அங்கு உரையாற்றுகையில் சுக்ரா போன்ற பிள்ளைகளை இந்த நாடு முஸ்லிம் சமூகத்திடம் கேட்கிறது என்றார். 


தீவிரவாத குழுக்களின் தீவிரவாத கருத்துக்கள் இப்பகுதியில் பரவாமல் தடுப்பதற்கு பாரம்பரிய முஸ்லிம்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தாம் ஒத்துழைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.