நாட்டில் மேலும் 08 மரணங்கள் பதிவு! பல தொற்றலாளர்கள் இன்றும் இனம்காணப்பட்டனர்!

நாட்டில் மேலும் 08 மரணங்கள் பதிவு! பல தொற்றலாளர்கள் இன்றும் இனம்காணப்பட்டனர்!


இலங்கையில் மேலும் 08 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 351 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


  1. கொச்சிக்கடை பகுதியை சேர்ந்த வயது 77 வயது பெண்ணொருவர்.
  2. கடவத்தை பகுதியை சேர்ந்த 73 வயது பெண்ணொருவர்.
  3. மொறட்டுவை பகுதியை சேர்ந்த 56 வயது ஆணொருவர்.
  4. களனி பகுதியை சேர்ந்த 83 வயது ஆணொருவர்.
  5. கொழும்பு 14 ஐ சேர்ந்த 85 வயது ஆணொருவர்.
  6. கொழும்பு 13ஐ  சேர்ந்த 82 வயது பெண்ணொருவர்.
  7. மஹரகம பகுதியை சேர்ந்த 76 வயது பெண்ணொருவர்.
  8. முன்தளம பகுதியை சேர்ந்த 48 வயது ஆணொருவர்.


இதேவேளை, இலங்கைக்குள் இன்று மாத்திரம் 726 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டனர்.


இதனையடுத்து நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 68,576 ஆக உயர்ந்துள்ளது.


மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,639 ஆக பதிவாகியது.


இதேவேளை கொரோனாவில் இருந்து குணமானோரின் மொத்த எண்ணிக்கை 62,594 ஆக அதிகரித்துள்ளது.கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.