நாட்டில் அரசு வெளியிடும் கொரோனா தொடர்பான புள்ளி விபரங்கள் போலியானவை! -உபுல் ரோஹன

நாட்டில் அரசு வெளியிடும் கொரோனா தொடர்பான புள்ளி விபரங்கள் போலியானவை! -உபுல் ரோஹன


கொரோனா நோய்த் தொற்று தொடர்பில் அரச அதிகாரிகளினால் வெளியிடப்பட்டு வரும் புள்ளிவிபரத் தகவல்கள் பொய்யானவை என பொதுச் சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.


சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.


கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதிலும் பரவியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


நோய்த் தொற்று தொடர்பில் அடிமட்ட அளவில் தகவல் திரட்டப்படாது சில உயர் அதிகாரிகளின் தகவல்களை மட்டும் கருத்திற் கொள்வதனால் இந்த நிலைமை உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.


மேலும் சில இலத்திரனியல் ஊடகங்களினால் வெளியிடப்பட்டு வரும் கொரோனா தொடர்பான புள்ளிவிபரத் தகவல்கள் குறித்து தமது சங்கத்தினருக்கு சந்தேகம் நிலவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.


ஆரம்ப நிலை தகவல்களை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அரசாங்கத்தின் அதிகாரிகள் தங்களது சங்கத்துடன் தொடர்பு கொள்ள வேண்டுமென அவர் கோரியுள்ளார்.


மேல் மாகாணத்தில் காணப்பட்ட கொரோனா நிலைமை தற்பொழுது நாட்டின் அனைத்து பாகங்களுக்கும் பரவியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


நாட்டின் பல்வேறு கைத்தொழில் பேட்டைகள் மற்றும் தனியார் துறைத் தொழில்களில் ஈடுபடுவோருக்கும் கொரோனா தொற்று உதியாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்த விடயம் குறித்து சரியான தகவல்களை பெற்றுக் கொண்டு கடுமையான தீர்மானங்கள் எடுக்க வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது என தொற்று நோய் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் அமைச்சின் செயலாளர் வைத்தியர் அமால் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.