உலகில் மிகப்பெரிய விளையாட்டரங்கு; ஒரே நாளில் முடிவுக்கு வந்த டெஸ்ட் போட்டி! இந்திய அணி அபார வெற்றி!
advertise here on top
advertise here on top

உலகில் மிகப்பெரிய விளையாட்டரங்கு; ஒரே நாளில் முடிவுக்கு வந்த டெஸ்ட் போட்டி! இந்திய அணி அபார வெற்றி!


அகமதாபாத் - நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.


சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்திலும், அதே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து அணியை 317 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தியிருந்தது.


இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி அகமாதாபாத்தில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய விளையாட்டரங்கான நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. பிங்க் பால் டெஸ்ட் போட்டியான இதில் நேற்று டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.


முதல் இன்னிங்ஸில் வெறும் 48.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்களை இழந்து 112 ரன்களுக்கு சுருண்டது. சுழற்பந்து வீச்சாளர் அக்ஸர் பட்டேல் 6 விக்கெட்களையும், அஸ்வின் 3 விக்கெட்களயும், இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்து இந்திய அணியும் 145 ரன்களுக்கு ஆட்டமிழந்து தடுமாறியது. முதல் நாளின் முடிவில் 99 ரன்களுக்கு 3 விக்கெட்கள் எடுத்திருந்தது இந்திய அணி.


ஜோ ரூட் 8 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும், ஜாக் லீச் 54 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ரூட் முதல் முறையாக 5 விக்கெட்டுகளை டெஸ்ட்டில் கைப்பற்றினார்.


$ads={1}


இதனையடுத்து 33 ரன்கள் பின்னிலையுடன் 2வது இன்னிஸ்சை தொடங்கிய இங்கிலாந்து அணி வெறும் 81 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இன்று இழக்க நேர்ந்தது. முதல் இன்னிங்ஸ் போலவே அக்ஸர் பட்டேல் 5 விக்கெட்களையும், அஸ்வின் 4 விக்கெட்களையும் எடுத்தனர். அஸ்வின் மைல்கல் சாதனை ஒன்றை இப்போட்டியில் படைத்தார் 400 விக்கெட்கள் வீழ்த்திய இந்தியாவின் 4வது வீரரானார் அஸ்வின்!இதனிடையே 48 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி வெற்றி பெற்றது.


இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.