கொரோனா தடுப்பூசியினை புறக்கணித்த ஆயுர்வேத மருத்துவர்கள் - “ஆயுர்வேத மருந்துகள் எங்களுக்கு போதும்!”

கொரோனா தடுப்பூசியினை புறக்கணித்த ஆயுர்வேத மருத்துவர்கள் - “ஆயுர்வேத மருந்துகள் எங்களுக்கு போதும்!”

கொரோனா வைரசுக்கு தடுப்பூசி தேவையில்லை என்று பெரும்பாலான ஆயுர்வேத மருத்துவர்கள் முடிவு செய்துள்ளதாக அரசு ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி பெற வேண்டாம் என்று மருத்துவர்கள் முடிவு செய்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் ருவான் இந்திக தெரிவித்துள்ளார்.

ஆயுர்வேத மருத்துவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது, ஆனால் ஆயுர்வேத மருந்துகளின் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் அதிகரிக்க முடியும் என குழு தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு மட்டுமல்ல, எந்த வைரசுக்கும் சிகிச்சையளிக்க ஆயுர்வேத மருந்துகள் பயன்படுத்தப்படலாம் என்றும் சங்கம் கூறுகிறது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post