கொரோனா : ஜனாஸாவுக்கு இராண்டாவது பி.சி.ஆர் செய்ய கோரி தாக்கல் செய்த மனு தொடர்பில் இன்று வெளியான தீர்ப்பு!

கொரோனா : ஜனாஸாவுக்கு இராண்டாவது பி.சி.ஆர் செய்ய கோரி தாக்கல் செய்த மனு தொடர்பில் இன்று வெளியான தீர்ப்பு!

கொரோனா தொற்று காரணமாகவே உயிரிழந்தாக கூறிய ஜனாஸாவுக்கு இரண்டாவது முறையாக பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (18) தள்ளுபடி செய்துள்ளது.

மனுதாரர் மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அளித்த சமர்ப்பிப்புகளை கருத்தில் கொண்டு நீதியரசர்கள் அர்ஜுன ஒபேசேகர மற்றும் மாயதுன்னே கொரயா ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை நிராகரித்தது.

சட்டமா அதிபரை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல், இந்த மனுவை விசாரணைக்கு உட்படுத்தாமல் தள்ளுபடி செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வினைக் கேட்டுக்கொண்டார்.

இருப்பினும் பி.சி.ஆர் சோதனைகள் தவறான முடிவைத் தரக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளதாகவும், எனவே ஆரம்ப பரிசோதனை செல்லுபடியானது என உறுதிப்படுத்த இரண்டாவது பரிசோதனையை நடத்த கோருவதாக மனுதாரரை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி மன்றுரைத்தார்.

திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர், களுபோவில வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டடிருந்த நிலையில், கடந்த 31ஆம் திகதி உயிரிழந்தார்.

இதனையடுத்து, குறித்த இளைஞர் கொரோனா தொற்று காரணமாகவே உயிரிழந்த்தாக, வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இரண்டாவது பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படும் வரை, சடலத்தை தகனம் செய்வதை தவிர்க்கும் வகையில் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, உயிரிழந்த நபரின் தந்தையால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post