க.பொ.த சாதாரண தர பரீட்சை தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

க.பொ.த சாதாரண தர பரீட்சை தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!


க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு விசேட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


அதற்கமைய பரீட்சை அனுமதி பத்திரத்தில் குறைப்பாடுகள் இருந்தால் அதனை திருத்தம் செய்வதற்கு பரீட்சைகள் திணைக்களத்தினால் சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.


பரீட்சை எழுதும் பரீட்சாத்திகளுக்காக விசேட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


$ads={1}


அதற்கமைய பரீட்சை அனுமதி பத்திரத்தில் குறைப்பாடுகள் அல்லது பிழைகள் உள்ளவர்கள் www.doenets.lk இணையத்தளத்திற்குள் சென்று திருத்திக்கொள்ள முடியும்.


எப்படியிருப்பினும் பாடசாலை விண்ணப்பதாரிகள் பாடசாலை அதிபர் மூலமும், தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் ஒரு வாரத்திற்குள் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post