நாய் மலம் கழித்தமையால் ஏற்பட்ட சண்டை! இருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி!

நாய் மலம் கழித்தமையால் ஏற்பட்ட சண்டை! இருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி!


அம்பாறை - அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அயல் வீட்டுக்கு சொந்தமான நாய் தன்னுடைய வீட்டு வாசல் பகுதியில் மலம் கழிப்பது தொடர்பாக இரு வீட்டுக்கிடையே ஏற்பட்ட  வாய்தர்கத்தையடுத்து நாயின் உரிமையாளருக்கும்  அயல் வீட்டுடன் உரிமையாளருக்கும் இடையே  ஏற்பட்ட சண்டையையடுத்து 02 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


இதுபற்றி மேலும் தெரிய வருவதாவது,


ஆலையடிவேம்பு பஸ்தியான் வீதியிலுள்ள குறித்த வீடு ஒன்றில் நாய் வளர்த்து வருகின்றனர். இந்த நாய் அயல் வீட்டின் முன்பக்க வாசல் பகுதியில் மலம் கழித்து வந்துள்ளது. இது தொடர்பாக நாய் உரிமையாளரிடம் அயல் வீட்டுக்காரர் தெரிவித்து வந்ததையடுத்து இரு வீட்டின் உரிமையாளர்களுக்கிடையே நீண்காலமாக சர்ச்சை இடம்பெற்று வந்துள்ளது. 


இந்நிலையில், சம்பவதினமான நேற்று இரவு சுமார் 07.00 மணியளவில் குறித்த நாய் வழமைபோல அயல் வீட்டின் முன்பகுதியில் மலம் கழித்துள்ளதையடுத்து அயல் வீட்டின் உரிமையாளர் நாய் மலம் கழித்த மலத்தை செப்பின் பையில் அள்ளி எடுத்து நாயின் உரிமையாளரின் வீட்டின்முன் பகுதியில் வீசியதையடுத்து நாயின் உரிமையாளாரின் குடும்பத்தினருக்கு அயல் வீட்டின் குடும்பத்துக்கும் இடையே ஏற்பட்ட வாய்தர்க்கம் சண்டையில் முடிந்தது .


இந்த சண்டையில் நாயின் உரிமையாளரின் குடும்பத்தினர் அயல் வீட்டின் உரிமையாளர் மீது தாக்கியதில் அவர் படுகாயமடைந்ததுடன் தாக்குதலை மேற்கொண்ட ஒருவர் உட்பட இருவர் படுகாயடமைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


-சரவணன்


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.