ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் மூழ்கி மரணம்! பாலக்காடு பகுதியில் சோகம்!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் மூழ்கி மரணம்! பாலக்காடு பகுதியில் சோகம்!


கேரளா - பாலக்காடு, ஆலத்தூர் பகுதியில் ஆட்டோ டிரைவர் ஜஸீரின் மூன்று குழந்தைகள் ஜின்ஷாத் (12) ரின்ஷாத் (07) ரியாஸ்(03) ஆகிய மூவரும் அருகிலுள்ள மாமரத்திலிருந்து பறித்த மாம்பழங்களை கழுவ ஒரு சகோதரர் குளத்திற்குச் சென்ற போது தவறுதலாக சறுக்கி விழுந்தவிட்டார்.


இதைப் பார்த்து கொண்டிருந்த மற்றொரு சகோதரர் இவரைப் பிடிக்க குளத்தில் குதித்தார் இரு சகோதரர்களும் குளத்தில் சாடி விளையாடுகிறார்கள் என்று நினைத்து கடைசி சகோதரனும் குளத்தில் குதித்து அனைவரும் நீரில் மூழ்கினர்.


எல்லோரும் மூழ்குவதைப் பார்த்த அங்கே நின்றிருந்த சிறுபெண்மணி ஸ்ருதி கதரத் தொடங்கியுள்ளாள்.


இதற்கிடையில் குழந்தைகளின் தாய் அவர்களைத் தேடி வந்த போது ஏதோ அசம்பாவிதம் நடந்ததை உணர்ந்து அழ ஆரம்பித்ததும் மக்கள் ஓடி வந்து குளத்திலிருந்து குழந்தைகளை மீட்டனர் ஆனால் அதற்கு முன்னரே அவர்கள் அனைவரதும் உயிர் பிரிந்திருந்தது.
கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.