
கம்பஹா நகரில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்த காரணத்தினால் நகரில் ஒருபகுதி இன்று (09) மாலை முதல் மூடப்பட்டுள்ளது.
கம்பஹா நகர மேயர் ஏரங்க சேனாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
நகரில் ஒருபகுதியில் வர்த்தக நிலையங்களில் கடந்த மூன்று நாட்களாக நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 58 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்கள் இருக்கின்ற பிரதேசங்கள் என மூன்று இடங்கள் அடையாளங் காணப்பட்டு அந்தப்பகுதிகளும் தற்சமயம் முடக்கப்பட்டுள்ளன.
மேலும் குறித்த இடங்களைச் சேர்ந்த 200ற்கும் அதிகமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.