இலங்கை கடற்படையினருக்கு எதிராக இந்திய உச்சநீதிமன்றில் வழக்கு!

இலங்கை கடற்படையினருக்கு எதிராக இந்திய உச்சநீதிமன்றில் வழக்கு!


இலங்கை கடற்படையினருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


ஜனவரி 18ஆம் திகதி இரவு இந்திய மீனவர்கள் பயணித்த படகு இலங்கை கடற்படையினரின் கப்பலில் மோதியதில் 04 மீனவர்கள் பலியாகினார்கள்.


இந்நிலையில் 04 தமிழக மீனவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் இலங்கை கடற்படை அதிகாரிகளை கைது செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 5 கோடியை இலங்கை அரசிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கையும் இந்த மனுவில் முன்வைக்கப்பட்டுள்ளது.


வழக்கறிஞர் ஜெய் சுகின் தாக்கல் செய்த மனு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.