மக்களே அவதானம் - இணையவழி கொள்ளை - கொழும்பில் மோசடியாளர்கள் பலர் கைது!

மக்களே அவதானம் - இணையவழி கொள்ளை - கொழும்பில் மோசடியாளர்கள் பலர் கைது!

இணையவழி பரிவர்த்தனை மூலம் ரூ.17 இலட்சத்தி 45,000 மோசடி செய்த ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு ஒன்றை களனி பிரதேச குற்ற புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளது.

குறித்த குழு மீது பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது.

பரிசு வென்றதாக கூறி, அதற்கான ஆரம்ப கட்ட பணத்தை வைப்பிலிட செய்ய கூறிய மோசடி என முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

இந்த மோசடியை பல்வேறு சிம் கார்டுகளைப் பயன்படுத்தி ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் நடத்தி வருவதாக களனி பிரதேச குற்ற புலனாய்வு பிரிவு நடத்திய விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

அதன்படி, இந்த சம்பவம் தொடர்பாக 4 நைஜீரியர்கள், 2 பெண்கள் மற்றும் இலங்கையர்கள் உட்பட மொத்தமாக 8 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நைஜீரியர்கள் தங்கியிருந்த கல்கிஸ்ஸை உள்ள ஒரு வீட்டில் இரண்டு கணினிகள், பல்வேறு தொலைபேசி நாடுகளில் பயன்படுத்தப்பட்ட 79 தொலைபேசி சிம் கார்டுகள், ஏராளமான போலி நாணயத்தாள்கள் மற்றும் பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி. அஜித் ரோஹன தெரிவிக்கையில், இலங்கையிலிருந்து பல்வேறு சிம் கார்டுகளைப் பயன்படுத்தி இதுபோன்ற மோசடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறினார். மேலும் இவ்வாறான தொலைப்பேசி அழைப்புக்கள் வெளிநாட்டிலிருந்து வருவதாக மோசடி செய்யப்பட்டது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.