வவுனியா செட்டிகுளத்தில் தற்கொலை அங்கிகள் மீட்பு!

வவுனியா செட்டிகுளத்தில் தற்கொலை அங்கிகள் மீட்பு!


செட்டிகுளம், சின்னத்தம்பனை பகுதியில் தற்கொலை அங்கிகள் இரண்டு பொலிஸாரால் இன்று (17)  மீட்கப்பட்டுள்ளன.


வவுனியா, செட்டிகுளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வீரபுரம், சின்னதம்பனை பகுதியில் உள்ள சின்னக்குளத்தை அண்டிய சிறிய காட்டுப் பகுதியில் விசேட அதிரடிப்படையினரும், பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை மீட்கப்பட்டுள்ளன.


இதனையடுத்து, மேலும் அப்பகுதியில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நிலத்தை தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.


-கதீஸ்


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.