நாங்கள் குர்ஆனின் புற்றுநோய் போன்ற போதனைகளுக்கு எதிராகவே போரிட்டோம் - ஞானசார தேரர் அதிரடி!

நாங்கள் குர்ஆனின் புற்றுநோய் போன்ற போதனைகளுக்கு எதிராகவே போரிட்டோம் - ஞானசார தேரர் அதிரடி!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் படி எங்களை தடை செய்யுங்கள் ஆனால் அதேவேளை ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துங்கள் என பொதுபலசேனாவின் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

எங்களை தடை செய்வது குறித்து நாங்கள் பெருமகிழ்ச்சியடைவோம் ஆனால் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உரியவிதத்தில் நடைமுறைப்படுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை பொதுபலசேனாவை ஏன் தடைசெய்கின்றீர்கள் என்பதற்கான காரணத்தினை வெளியிடவேண்டும் எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் எந்த குற்றங்களிலும் ஈடுபடவில்லை நாங்கள் எங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கையில் வகாபிசத்தையும், ஐஎஸ் உட்பட பல இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யவேண்டும் என்ற ஆணைக்குழுவின் பரிந்துரையை அவர் வரவேற்றுள்ளார்.

எங்களிற்கு இந்த பரிந்துரைகள் ஆச்சரியமிக்கவில்லை இந்த பரிந்துரைகளை தீவிரமாக ஆராய்ந்தால் நாங்கள் பெருமகிழ்ச்சியடைவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் குரானின் போதனைகளுக்கு எதிராக போரிட்டோம், இந்த போதனைகள் நாடுகளிற்கான புற்றுநோய் போன்றவை சில நாடுகள் இந்த போதனைகளை தடை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.