நாட்டில் நேற்று பதிவான கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான தகவல்!

நாட்டில் நேற்று பதிவான கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான தகவல்!

நேற்று (24) நாட்டில் புதிதாக 458 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக கொவிட் தொற்று பரவலை தடுக்கும் செயலணி குறிப்பிட்டுள்ளது.

அவர்களில்,

கொழும்பு மாவட்டத்தில் 94 நபர்கள், கம்பஹா மாவட்டத்தில் 76 பேர், கண்டி மாவட்டத்தில் 38 பேர், அம்பாறை மாவட்டத்தில் 12 பேர், பதுளை மாவட்டத்தில் 12 பேர், புத்தளம் மாவட்டத்தில் ஒருவர், நுவரெலியா மாவட்டத்தில் 25 நபர்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருவர், வவுனியா மாவட்டத்தில் ஒருவர், யாழ். மாவட்டத்தில் ஐவர், திருகோணமலை மாவட்டத்தில் ஒருவர், முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவர் புதிதாக தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்று (25) காலை வரை நாட்டில் மொத்தமாக 81,467 பேர் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.அதேநேரம், 76,514 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

நேற்றைய தினம் (24) 4 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 457 ஆக அதிகரித்துள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post