இன்று 500,000 கொரோனா தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன - 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பம்!

இன்று 500,000 கொரோனா தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன - 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பம்!

இன்று (25) 500,000 கொரோனா தடுப்பூசி இந்தியாவிலிருந்து இலங்கை வந்துள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு தடுப்பூசிகள் வந்துள்ளதாக செயல் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமான தெரிவித்தார்.

இலங்கை அரச மருந்துகள் மற்றும் இந்திய சீரம் நிறுவனம் இடையே கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

இத் தடுப்பூசிகள் இந்தியாவில் இருந்து பெறப்பட்ட இரண்டாவது தொகுதி தடுப்பூசிகள் ஆகும்.

ஜனவரி மாதம் இந்தியாவிடம் இருந்து 500,000 எஸ்றா ஸெனகா தடுப்பூசிகள் நன்கொடையாக இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்தது.

மேலும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் பல பகுதிகளில் ஆரம்பமானது.

கொரோனா தடுப்பூசியை 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை (26) முதல் தெஹிவலை எம்.எம்.சி வளாகத்தில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெஹிவலை சுகாதாரத் துறையின் மருத்துவ அலுவலர் அறிவித்தார்.

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் 30-60 வயதுகளுக்கு இடைப்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

பெப்ரவரி 26: நெதிமால
பெப்ரவரி 27: சரணங்கர
பெப்ரவரி 28: கொஹுவலை
மார்ச் 2: பூங்கா (பார்க்)
மார்ச் 3: தெஹிவலை கிழக்கு
மார்ச் 5: கவுடான கிழக்கு

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post