முஸ்லிம்களுக்கு மாத்திரம் உரிமைகளை வழங்கக் கூடாது !!

முஸ்லிம்களுக்கு மாத்திரம் உரிமைகளை வழங்கக் கூடாது !!

கொரோனா சடலங்கள் தகனம் செய்யப்படுவது தொடர்பில் தற்போதுள்ள சட்டத்தை எந்த மதக்கோட்பாட்டின் விருப்பத்திற்கும் திருத்தியமைக்க கூடாது என மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.

சடலங்களை தகனம் செய்ய நாட்டில் ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்றும் அதன்படி அனைத்து கொரோனா தொற்றினால் மரணித்த சடலங்கள் தகனம் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு மதத்தின் வேண்டுகோளுக்கிணங்க உடல்களை அடக்கம் செய்யக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

முஸ்லிம்களின் மத அடிப்படையில் அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டால், பௌத்தர்களின் சடலங்கள் புத்த சடங்குகளில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இருபாலாரினதுன் மதகோட்பாடுகளுக்கும் மதிப்ப்ளிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.