பாம்பு தீண்டியதால் புதுமண தம்பதிகளின் சிசு பரிதாபமாக பலி!

பாம்பு தீண்டியதால் புதுமண தம்பதிகளின் சிசு பரிதாபமாக பலி!

மட்டக்களப்பு, சின்னப் புல்லுமலை பகுதியில் பாம்பு தீண்டியதால் சுமார் இரண்டு மாதங்களேயான ஆண் சிசு ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் திருமணமான தம்பதியினருக்கு இது முதல் குழந்த‍ை ஆகும்.

அதிகாலையில் மயக்க நிலையில் இருந்த குறித்த குழந்தையை பெற்றோர் உடனடியாக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதன்போது குழந்தையை பரிசோதித்த வைத்தியர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னரான குழந்தையின் பிரேத பரிசோதனையில் உள்ளங்கையில் பாம்பு தீண்டியிருப்பது தெரியவந்துள்ளது.

வெள்ளிக்கிழமை அரவம் தீண்டியதால் உயிரிழந்த சிசுவின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post