சனத் ஜயசூரியவுக்கு எதன் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது? - கேள்வி எழுப்பிய மக்கள்!

சனத் ஜயசூரியவுக்கு எதன் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது? - கேள்வி எழுப்பிய மக்கள்!

இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டமை குறித்து ஆராய்ந்து வருவதாக இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
சனத்ஜெயசூரியவிற்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்பட்டதை காண்பிக்கும் படங்கள் வெளியானதை தொடர்ந்து கரிசனைகள் வெளியாகியுள்ளன.

சனத்ஜெயசூரியாவிற்கு எதன் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்பட்டது என வினவப்பட்டவேளை இந்த விடயம் குறித்து ஆராய்ந்துவருவதாக இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

அதிகளவு பாதிக்கப்படக்கூடிய பகுதி என தெரிவு செய்யப்பட்ட பகுதியில் சனத் ஜயசூரிய வாழ்ந்திருந்தால் அவரை அதிகாரிகள் தெரிவு செய்திருக்கலாம் என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

முன்னிலை பணியாளர்கள் இராணுவத்தினர் பொலிஸார் பொதுமக்களுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பவர்கள் பாதிக்கப்படக்கூடியவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.