முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி! பிரதமரின் அறிவிப்புக்கு அமெரிக்காவும் வரவேற்பு!

முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி! பிரதமரின் அறிவிப்புக்கு அமெரிக்காவும் வரவேற்பு!


கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.


கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்ய வேண்டும் என்ற நடைமுறையை முடிவிற்கு கொண்டுவரும் பிரதமரின் அறிவிப்பு குறித்து வெளியாகியுள்ள செய்திகளை வரவேற்பதாக அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார்.


சர்வதேச பொதுசுகாதார விழுமியங்கள் மற்றும் மத உரிமைகளை மதிப்பது ஆகியவற்றின் அடிப்படையில் திருத்தப்பட்ட நடைமுறைகளை நடைமுறைப்படுத்துதல் சாதகமானதொரு நடவடிக்கை என தூதுவர் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.