கொரோனா தொற்றினால் மேலும் 5 உயிரிழப்புகள் பதிவு; இன்றும் ஆயிரத்தை எட்டியது!

கொரோனா தொற்றினால் மேலும் 5 உயிரிழப்புகள் பதிவு; இன்றும் ஆயிரத்தை எட்டியது!


இன்றைய தினம் கொரொனா தொற்றினால் மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 375 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு 05 ஐ சேர்ந்த 73 வயது பெண்ணொருவர், வத்தளை பகுதியை சேர்ந்த 51 வயது பெண்ணொருவர், அழுத்கம பகுதியை சேர்ந்த  67 வயது ஆணொருவர், கம்பஹா பகுதியை சேர்ந்த 75 வயது ஆணொருவர், மற்றும் வெல்லம்பிட்டி பகுதியை சேர்ந்த 61 வயது ஆணொருவர். 

அதேநேரம், இன்று மாத்திரம் 955 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72,166 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 6,743 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.