வெள்ளவத்தை பகுதியில் இளைஞன் பரிதாப பலி - பொலிஸாருக்கு எழுந்துள்ள பல சந்தேகங்கள்!

வெள்ளவத்தை பகுதியில் இளைஞன் பரிதாப பலி - பொலிஸாருக்கு எழுந்துள்ள பல சந்தேகங்கள்!

வெள்ளவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய கட்டடம் ஒன்றிலிருந்து கீழே விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு 7.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த நபர் கட்டடத்தில் பணியாற்றும் நபர் அல்ல என்ன தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 30 வயதுடைய நபராகும். எனினும் அவரது அடையாளங்கள் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வெள்ளவத்தை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.