
பேராதெனிய பல்கலைக்கழக வல்லுநர்கள் குழு நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பிறகு இதனை உருவாக்கியுள்ளது.
இந்த முகக்கவசம் தற்போதைய KN95 முகக்கவசத்தினை விட பாதுகாப்பானது என்று பரிசோதனை ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சி குழுவின் நிபுணர் டாக்டர் சமிந்த ஹேரத் தெரிவித்தார்.
முகக்கவசத்தினூடாக 99% ஆன வைரஸ்கள் அழிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பொதுவாக வைரஸ் ஒரு சாதாரண முகக்கவசத்தில் சுமார் 7 நாட்கள் தங்கியிருக்கும், ஆனால் இந்த முகக்கவசம் மிகக் குறுகிய காலத்தில் அதை அழிக்கும் வலிமை கொண்டதாக டாக்டர் சமிந்த ஹேரத் தெரிவித்தார்.
இந்த முகக்கவசத்தினை 25 தடவைகள் கழுவி மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டுகிறார்.
