10 ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த நபர் பலி!

10 ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த நபர் பலி!

கொழும்பில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் 10 வது மாடியின் மேல் இருந்து குதித்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (25) நிகழந்துள்ளது

பலியான நபர் கொழும்பில் ஒரு முன்னணி தொழிலதிபரின் 30 வயது மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்

இந்த சம்பவம் நேற்று (25) அதிகாலை 1:45 மணியளவில் கொல்லுபிட்டிய பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டதுடன், பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். இறந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் நேற்றைக்கு முந்தைய தினம் (24) தூக்கமின்மை காரணமாக சிகிச்சை பெற குறித்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார். நபர் மருத்துவமனையின் பத்தாவது மாடியில் அமைந்துள்ள கழிப்பறை ஜன்னலினூடாக கீழே குதித்ததாக நம்பப்படுகிறது

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post