கடல் மார்க்கமாக தப்பிச் சென்ற தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள்!

கடல் மார்க்கமாக தப்பிச் சென்ற தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள்!

திஸ்ஸமஹாராம கிரிந்த ஆமதுவ என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ள மீனவர்களின் குழுவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அதன்படி, அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஒரு குழு தனிமைப்படுத்தப்பட்டது.

குறித்த குழுக்களில் தங்கல்ல, குடவெல்ல, தெவுந்தர, மாத்தறை, வெலிகம போன்ற தெற்கு மாகாணத்திலுள்ள பிரதேசங்களில் வசிப்பவர்காளாவர்கள்.

குறித்த சந்தேக நபர்கள் கடல் வழியாக தப்பிச் சென்றுள்ளதாக திஸ்ஸமஹாராம சுகாதார மருத்துவ அதிகாரி பிரபாத் லியனராச்சி தெரிவித்தார்.

இங்கு வசிக்கும் 85 நபர்களில் 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post