மேலும் 6 மாதங்களுக்கு கொரோனா தடுப்பூசி அவசியமில்லை - வாசுதேவ நானாயக்கார

மேலும் 6 மாதங்களுக்கு கொரோனா தடுப்பூசி அவசியமில்லை - வாசுதேவ நானாயக்கார

ஆறு மாத காலத்திற்கு கொரோனா தடுப்பூசி தனக்கு வேண்டாம், என்று அமைச்சர் வாசுதேவ நானாயக்கார தெரிவித்துள்ளார்.

அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் வைரசுக்கான எதிர்ப்புச் சக்தி தன்னுள் இருப்பதாவவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரசுக்கு எதிராக எதிர்ப்பு சக்தி தன்னுள் இருப்பதால், அவர் மேலும் ஆறு மாதங்கள் வரை சமூகத்துடன் ஒன்றி வாழ முடியும் என்றும், தடுப்பூசி பெற எந்த அவசரமும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அடுத்த மூன்று மாதங்களில் முழு நாட்டிற்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என்று வாசுதேவ நானாயக்கார மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post