ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையில் சதி இடம்பெற்றுள்ளது! 69 லட்சம் மக்களை ஏமாற்றியுள்ளனர்!

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையில் சதி இடம்பெற்றுள்ளது! 69 லட்சம் மக்களை ஏமாற்றியுள்ளனர்!

இன்று (12) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருன கருத்து தெரிவிக்கையில்,

கடந்த தேர்தல்கள் பிரசார மேடைகளில் பிரதான பேசு பொருளாக இருந்த இந்த ஆட்சி மாற்றத்திற்கு பிரதான சாதகமாக இருந்து ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை பூர்த்தி செய்ப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை துரிதமாக பாராளுமன்றத்திற்கு சமர்ப்பியுங்கள்.இதற்கான எந்த சாத்தியங்களும் இல்லை போன்று தான் தோன்றுகிறது. காதினலுக்கும் இது தொடர்பாக முறையாக அறிவிக்கப்படவில்லை.

நாட்டில் மிக முக்கியத்துவமிக்க ஒர் நிகழ்வு பல உயிர்கள் காவுகொள்ளப்பட்ட ஒர் சம்பவம். ஆட்சிக்கு வந்து ஓன்றரை வருடங்கள் கடந்தும் இன்னும் இதை முடிப்பதற்கான சாத்தியங்கள் இவர்களுக்கு இல்லை. சட்டமா அதிபரும் இதில் பூரண முறையான விசாரணைகள் முடிவுறவில்லை என்று தெரிவித்துள்ளார். இதில் பல சந்தேகங்கள் எழுகின்றன. இதன் பின்னால் ஓர் சதி இடம்பெற்றிருக்க வேண்டும். எதோ ஒர் உயர் மட்ட டீல் இருக்கிறது. இல்லை என்றால் இதன் உன்மைகள் எப்போதோ முன் வந்திருக்கும். 69 இலட்சம் மக்களையும் ஏமாற்றியுள்ளனர்.

இதனை இயக்கிய பிரதான நபர்கள் யார்? அரசியல் செல்வாக்கு கொடுத்தவர்கள் யார்? இதனை அடிப்படையாக வைத்து தேர்தலின் போது இன மத வாதங்களை போஷித்து பிரசாரம் மேற்கொண்டோர் இன்று மௌனிகளாக இருக்கின்றனர். எனவே மக்களை ஏமாற்றாமல், காதினலை ஏமாற்றாமல் நாட்டு மக்களை ஏமாற்றாமல் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்பிக்கவும், பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பது என்பது மக்களுக்கு தெரியப்படுத்துவதாகும். எனவே துரிதமாக சமர்க்கவும்.

அதேநேரம், கொரொனா மரண அடக்கத்திற்கு பாராளுமன்றத்தில் பிரதமர் வழங்கிய வாக்குறுதிகளை மறு நாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாற்றுக் கருத்துக்களைக் கூறினர். பிரதமரின் கருத்தை விடவும் உறுப்பினர்களின் கருத்துக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். பிரதமரின் கருத்துக்கு மாற்றமான கருத்தை தெரிவிக்கும் அதிகாரம் கொண்டவர் ஜனாதிபதி மாத்திரம் தான். இதிலிருந்து உள்ளக பிளவுகள் வெளிப்படுகின்றன.

சிங்கள வாக்குகளைப் பெறுவதற்கு ஒரு வித கருத்தும் முஸ்லிம் மக்களுக்கு ஒரு கருத்துமாக இரட்டை முகங்களை வெளிப்படுத்திகின்றனர். 2015 க்கு முன்னரும் இவ்வாறே நடந்து கொண்டனர். சிங்கள வாக்குகளைப் பெற நாட்டில் ஒன்றையும் சர்வதேசத்தை சமாளிக்க இந்தியாவில் ஒன்றையும், ஐரேப்பிய ஒன்றியத்திற்கு பிரிதொன்றனையும் கூறி செயற்பட்டது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

பிரதமரின் அறிவிப்பை உலகம் அறிந்து கொண்டதுடன் இம்ரான் கான், அமெரிக்க தூதுவர், பிரித்தானிய தூதுவர் உட்பட பலர் டுவிட்டர் பதிவிட்டு வரவேற்றிருந்தார்கள். இன்று மாற்றுக் கருத்துக்களை கூறுகின்றனர்.

நிதி அமைச்சரும் இன்னும் பல உறுப்பினர்களும் பங்கு சந்தை குறித்து காம்பீரமான கருத்துக்களை கூறினர். இன்று என்ன நடந்துள்ளது? கடந்த இரு வாரங்களாக வரலாற்றில் என்றுமில்லாத வகையில் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பங்கு சந்தை குறித்து சர்வதேச முதலீட்டாளர்கள், புதிய பங்காளர்கள் இன்று நம்பிக்கை இழந்துள்ளனர். பங்கு சந்தையில் ஒரு குழு மாத்திரம் தொடராக இலாபங்களை சுருட்டிக் கொள்கின்றனர்.

அரசாங்கத்தின் நண்பர் வட்டம் ஒரு தலைபட்டசமாக இதை பெற்றுக் கொள்கின்றனர். அன்மையில் திடீரென பங்கு சந்தை செயன்முறை இரண்டு தடவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே பங்கு சந்தை நடவடிக்கைகள் குறித்து ஆரய வேண்டும். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமித்து மேசடியில் ஈடுபடுபவர்களை நீதிக்கு முன் கொண்டுவறுமாறு கூறுகிறேன்.

பொருளாதார அமைச்சு வெளியிட்ட விலைக்கு சந்தையில் கொள்வனவு விலை இல்லை. சதோசவிலும் சமூபகார கூட்டுறவு கடைகளிலும் கூட இந்த விலை இல்லை.அவ்வாறு இருந்தாலும் ஒருவருக்கு 1 கிலோ மாத்திரமே வழங்குகின்றனர்.இதைப் பெறறுக் கொள்ள பல கிலோ மீட்டர் வந்து முச்சகரவண்டிக்கு ஒரு தொகையும் அல்லது பஸ்ஸிற்கு 40 ரூபாவும் செலவளிக்க வேண்டியிருக்கிறது.

பொருட்களின் விலை அதிகரித்த வன்னமுள்ளன.

இனவாதம், மதவாதம், ஈஸ்டர் தாக்குதல், முன்னைய ஆட்சியில் வாழ்க்கை செலவு பேன்ற விடயங்களைக் கூறி அதிகாரத்திற்கு வந்து 69 இலட்சம் மக்களையும் ஏமாற்றியுள்ளனர்.

கொரொனா தொற்றாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வன்னமுள்ளனர். பிசிஆர் பரிசோதனையை குறைத்துள்ளனர். இன்று தடுப்பூசிகளை அமைச்சர்களும் அவர்களது குடும்பத்தினர்களும் பயன்படுத்துகின்றனர். இது எவ்வாறு இடம் பெற முடியும். இந்தியாவில் இருந்து இலவசமாக கிடைத்த தடுப்பூசிகளை தானே இவ்வாறு பயன்படுத்துகின்றனர்.

இன்று பல முன்னனி தனியார் நிறுவனங்கள் அவர்களுடைய பணியாட்களுக்கும் பிற மக்களுக்கும் தடுப்பூசிகளை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் கொள்வனவிற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. தனியார் துறைக்கும் இதற்கான வாய்ப்புகளைக் கொடுங்கள் என்று தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.