ஹட்டன் பகுதியில் வாகன விபத்து; 6 மாணவர்கள் காயம்; ஒருவர் கவலைக்கிடம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஹட்டன் பகுதியில் வாகன விபத்து; 6 மாணவர்கள் காயம்; ஒருவர் கவலைக்கிடம்!


ஹட்டனில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.


இவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹட்டன் – சலங்கந்த பிரதான வீதியின் டிக்கோயா ஒட்டரிதோட்டம் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.


16 வயதான பாடசாலை மாணவரே முச்சக்கர வண்டியை செலுத்தியுள்ளதுடன், வண்டியில் குறித்த மாணவர் உள்ளிட்ட 6 மாணவர்கள் பயணித்துள்ளனர்.


முச்சக்கர வண்டியின் சாரதியான பாடசாலை மாணவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.


விபத்தில் காயமடைந்த ஏனைய மாணவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.