
குறித்த பெண்ணிடமிருந்து 07 கிராம் 250 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொலன்னாவை பகுதியை சேர்ந்த 44 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் விற்பனையூடாக பெற்றுக்கொள்ளப்பட்ட பணத்தில் 5 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான அதிசொகுசு ஜீப் ஒன்றும் இரண்டு வேன்களும் மினிகூபர் ரக காரொன்றும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இந்த வாகனங்கள் தொடர்பில் நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் கூறினர்.
கைது செய்யப்பட்ட பெண்ணை கடுவல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, 07 நாட்களுக்கு தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.