இராணுவ வாகனத்தில் கைப்பற்றப்பட்ட 45 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின்!

இராணுவ வாகனத்தில் கைப்பற்றப்பட்ட 45 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின்!


இராணுவத்தினரால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனம் ஒன்றிலிருந்து 45 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் ஹொரணை பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. 


இது தொடர்பில் இராணுவ வீரர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


குறித்த இரு சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகையுடன் நேரடி தொடர்பற்றவர்கள் என்றும் இதன் பிரதான சந்தேக நபர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக சந்தேகிக்கப்படும் இருவராவர் என்பதும் விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


-மெட்ரோ
கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.