26 வயதுடைய கொரோனா ஜனாஸா - 2 ஆவது பி.சி.ஆர் செய்யக்கோரி நீதிமன்றில் மனுத்தாக்கல்!

26 வயதுடைய கொரோனா ஜனாஸா - 2 ஆவது பி.சி.ஆர் செய்யக்கோரி நீதிமன்றில் மனுத்தாக்கல்!

கொரோனா தொற்றுக்கு இலக்காகி இறந்த நபர் எனும் கூறப்படும் ஒருவரின் உடலை மறு ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரி மேற்கொள்ளப்பட்ட மனு தொடர்பாக, இம்மாதம் (பெப்ரவரி) 17 ஆம் திகதி கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் இயக்குநரையும் அதன் நீதித்துறை மருத்துவ அதிகாரியையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

குறித்த நாள் வரை உடல் தொடர்பாக அடுத்த நடவடிக்கை எடுப்பதை தவிர்க்குமாறும் மேல் நீதிமன்றம் குறித்த இருவருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

திருகோணமலையில் வசிக்கும் மொஹமட் எப்ரா லெப்பே முகமது ஹக்கீம் தாக்கல் செய்த மனுவுக்கு தலைமை தாங்கிய நீதிபதிகள் அர்ஜுன ஒபேசேகர மற்றும் மாயதுன்னே கொரயா ஆகியோர் அடங்கிய நீதிபதி குழு இந்த உத்தரவை பிறப்பித்தது.

அவரது 26 வயது மகன் மொஹமட் ஹக்கீம் முகமது தில்ஷாத் கொதலாவல வைத்தியசாலையில் கடமை புரிந்து வந்தார். மேலும் அவரின் உயிர் தூக்கத்திலேயே பிரிந்துள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது. 

அவரது சடலம் தொடர்பாக செய்யப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவர் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் என்பதை சோதனைகள் உறுதிப்படுத்தியதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கட்டாய தகனத்திற்கு எதிரான முஸ்லிம்களின் மதக்கோட்பிற்கு இணங்க, குறித்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய மீண்டும் பி.சி.ஆர் செய்யக்கோரியே இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இவரது உடல் தற்போது கலுபோவில மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

இறந்தவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்தாரா? இந்த சம்பவத்தின் சரியான தன்மையை அறிய விரும்புவதாக மனுதாரர் கூறுகிறார்.

இந்த மனுவினை ஃபைசர் முஸ்தபா, ஷாந்த ஜயவர்தன மற்றும் ருஷ்தி ஹபீப் ஆகியோர் வாதாடவுள்ளனர்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.