இந்தியாவின் கொவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி; 25 சுகாதார பணியாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

இந்தியாவின் கொவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி; 25 சுகாதார பணியாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!


கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட 25 சுகாதாரப் பணியாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


பதுளை பொது வைத்தியசாலையில் இந்த பணியாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.


தடுப்பூசிகளை செலுத்தியப் பின்னர் ஏற்பட்ட உடல் சிக்கல்களை அடுத்தே இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை இதுவரைக் காலமும் கொவிஷீல்ட் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களில் எவருக்கும் உடல் சிக்கல்கள் ஏற்பட்டமை குறித்த எவ்வித தகவல்களும் வெளியாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.