23 வயது சகோதரியை 3 மாதக் கர்ப்பிணியாக்கிய 16 வயது சிறுவன்! அம்பாறையில் சம்பவம்!

23 வயது சகோதரியை 3 மாதக் கர்ப்பிணியாக்கிய 16 வயது சிறுவன்! அம்பாறையில் சம்பவம்!


அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் தனது 23 வயது சகோதரியை 3 மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் தொடர்பாக இருவரையும் கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.


இந்தச் சம்பவம் இன்று (15) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த இரு பெண் பிள்ளைகள் சிறுவன் உட்பட 3 பிள்ளைகளையும் தாயாரையும் விட்டுவிட்டு தந்தை விலகிச் சென்றுள்ளதாகவும், அதன் பின்னர் தாய் 3 பிள்ளைகளையும் வீட்டில் விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்புக்கு சென்றுள்ளார்.


இந்நிலையில், குறித்த சிறுவனின் இரண்டாவது சகோதரி கல்முனையில் வீடு ஒன்றில் வீட்டுவேலைக்குச் சென்று வருவதாகவும் சகோதரனும் சகோதரியும் வீட்டில் தனிமையில் இருந்து வந்துள்ள நிலையில் சகோதரியின் உடல்நிலையில் சந்தேகம் கொண்டு கிராம உத்தியோகத்தர் ஊடாக பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக இருவரையும் இன்று திங்கட்கிழமை பொலிலார் கைது செய்ததுடன் குறித்த பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும், இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.