கத்தாரிலிருந்து இலங்கை செல்ல விரும்புபவர்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய தனிமைப்படுத்தல் விதிகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கத்தாரிலிருந்து இலங்கை செல்ல விரும்புபவர்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய தனிமைப்படுத்தல் விதிகள்!


கத்தாரிலிருந்து இலங்கைக்கு செல்ல விரும்புவர்கள் தங்களை இணையத்தளம் மூலம் பதிவு செய்ய கோரப்பட்டுள்ள நிலையில், தாயகம் திரும்பியதும், தனிமைப்படுத்தல் நிலையம் தொடர்பாக முட்கூட்டியே திட்டமிட்டு தங்களை தயார் படுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். தனிமைப்படுத்தல் தொடர்பாக கத்தாரிலுள்ள இலங்கை தூதரகம் தனது இணையத்தில் வெளியிட்டுள்ள விதிமுறைகள் வருமாறு,


அரச தனிமைப்படுத்தல் நிறுவனங்களில் தங்க விரும்புவோருக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்!


தொழில்வாய்ப்பை இழந்தவர்களுக்கு முன்னுரின்மை வழங்கப்படும்.


1. நாடு திரும்புவதத்கு 72 மணித்தியாலத்திக்குக்குள் ஒரு (PCR) பரிசோதனை செய்து எதிர்மறையாக இருந்தால் மாத்திரமே விமானப் பயணத்தை தொடர முடியும்.


2. குறிப்பிட்ட PCR பரிசோதனை செய்து எதிர்மறை பரிசோதனை அறிக்கையை (ஆங்கிலத்தில்) ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் குறித்த விமான நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.


3. இலங்கையில் மேற்கொள்ளப்படும் கொரோனா (PCR) பரிசோதனைகள் மற்றும் போக்குவரத்துக் கட்டணங்கள் ஆகியவற்றிற்கான செலவினை பொறுப்பேற்க வேண்டும்.


4. கடவுச்சீட்டு (Passport) காலாவதியாகிவிட்டால், புறப்படுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர், தூதரகத்தின் கொன்சியூலர் பிரிவிலிருந்து அவசர பயண ஆவணத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.


5. இலங்கையின் ஜனநாயக சோசலிச குடியரசால் விதிக்கப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும்.


சுய (ஹோட்டல்) தனிமைப்படுத்தலில் தங்க விரும்புவோருக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்!


1. ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்கான சகல செலவீனங்களை நாம் பொறுப்பெடுக்க வேண்டும்.


2. நாடு திரும்புவதத்கு 72 மணித்தியாலத்திக்குக்குள் ஒரு கொரோனா (PCR) பரிசோதனை செய்து எதிர்மறை பரிசோதனை அறிக்கையை (ஆங்கிலத்தில்) ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் குறித்த விமான நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.


3. இலங்கையில் மேற்கொள்ளப்படும் கொரோனா (PCR) பரிசோதனைகள் மற்றும் போக்குவரத்துக் கட்டணங்கள் ஆகியவற்றிற்கான அனைத்து செலவுகளையும் தாம் பொறுப்பேற்க வேண்டும்.


4. கடவுச்சீட்டு (Passport) காலாவதியாகிவிட்டால், புறப்படுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர், தூதரகத்தின் கொன்சியூலர் பிரிவிலிருந்து அவசர பயண ஆவணத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.


5. இலங்கையின் ஜனநாயக சோசலிச குடியரசால் விதிக்கப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்குதல் வேண்டும்.


மேலும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள சகல விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படித்து புரிந்து கண்டிப்பாக அதையே பின்பற்றுவதாகவும் உறுதியளிக்க வேண்டும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.