விமல் வீரவன்ச தரப்பில் 2 வெளிநாட்டு உளவாளிகள்? பகிரங்கப்படுத்தியது பொதுஜன பெரமுன!

விமல் வீரவன்ச தரப்பில் 2 வெளிநாட்டு உளவாளிகள்? பகிரங்கப்படுத்தியது பொதுஜன பெரமுன!


அமைச்சர் விமல் வீரவன்ச தரப்பில் இரண்டு வௌிநாட்டு உளவாளிகள் செயற்பட்டு வருவதாக வீடமைப்பு அதிகார சபையின் தலைவரும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளருமான ரேணுக பெரேரா தெரிவித்துள்ளார்.


பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


அண்மையில் அமைச்சர் விமல் வீரவன்சவின் வீட்டில் ஒரு பேச்சுவார்த்தை இடம்பெற்றது, அது குறித்து நாம் மிக ஆவலாக அவதானித்து வருகின்றோம், இந்த பேச்சுவாரத்தையில் இரண்டு வைத்தியர்கள் பங்கேற்றதுடன் அவர்கள் வௌிநாட்டு உளவுப்பிரிவினால் ஊதியம் பெறுபவர்கள். அதனை நாம் பொறுப்புணர்வுடன் கூறுவதுடன் எதிர்காலத்தில் அந்த நபர்களின் பெயர்களை நாம் பகிரங்கப்படுத்தவும் தயங்க மாட்டோம். 


அவரது அண்மைக்கால செயற்பாடுகளை ஆராய்ந்தன் பின்னரே இவற்றை நாம் ஊடகங்களுக்கு கூறுகின்றோம். ஒரு வைத்தியர் எப்போதும் திரைமறைவிலேயே உள்ளார். மற்றுமொரு வைத்தியர் 2015ஆம் ஆண்டு தற்போதை பிரதமருக்கு எதிரான பிரதான கூட்டணியில் இருந்தார். அவர்கள் வௌிநாட்டு உளவு நிறுவனங்களுடன் செயலாற்றுவது அரசியல் பரப்பில் அனைவரும் அறிந்த விடயமாகும்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.