திருமண வைபவத்தில் கலந்தகொண்ட 136 பேருக்கு கொரோனா! புதிய வகை வைரஸா?

திருமண வைபவத்தில் கலந்தகொண்ட 136 பேருக்கு கொரோனா! புதிய வகை வைரஸா?


குருநாகல் - அம்பன்பொல பகுதியில் இடம்பெற்ற திருமண வைபத்தில் கலந்துகொண்ட 250க்கும் அதிகமானோரில் 136 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


குறித்த கொரோனா கொத்தணியில் வைரஸ் வேகமாக பரவுவதாகவும் மற்றும் நோய் அறிகுறிகள் அதிகமாக தென்படுவதால் இது புதிய வகை கொரொனா வைரஸாக இருக்கக்கூடும் எனவும் சுகாதார பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.


கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் திகதி அம்பன்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வைபத்தில் கலந்து கொண்ட திருமண தம்பதியினர் உள்ளிட்ட 136 பேருக்கு இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.


குறித்த திருமண வைபவத்தின் இரண்டாம் நாள் நிகழ்வு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி அத்தனகல்லை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.


அதன்படி, குறித்த இரண்டு நாட்களிலும் மொத்தமாக 260 பேர் திருமண வைபவத்தில் கலந்து கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.


இந்நிலையில், மேலும் 100 ற்கும் அதிகமானோரின் PCR பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெறவுள்ள நிலையில் தற்போது இனங்காணப்பட்டுள்ள தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய சுமார் 450 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.