மின்சார வேலியில் சிக்குண்டு 08 வயது சிறுவன் பரிதாப பலி!

மின்சார வேலியில் சிக்குண்டு 08 வயது சிறுவன் பரிதாப பலி!


திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தனவெட்டைப் பகுதியில் யானை பாதுகாப்பு மின்சார வேலியில் சிக்குண்டு 08 வயது சிறுவன் ஒருவன் இன்று (09) உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இவ்வாறு உயிரிழந்த சிறுவன் சந்தனவெட்டை தி/மூ ஐங்கரன் வித்தியாலயத்தில் 2 ஆம் தரத்தில் கல்வி பயிலும் இந்திரன் ரஜீதன் என சம்பூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவ இடத்துக்கு வருகை தந்த சம்பூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


சிறுவன் மலம் கழிப்பதற்காகச் சென்ற போது யானை பாதுகாப்பு மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார் என ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


சிறுவனின் சடலம் தற்போது மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


மின்சார வேலியை யானை பாதுகாப்புக்கு போட்டுவிட்டு அணைக்காமல் சென்று சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த இரண்டு சந்தேகநபர்களை சம்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.


சம்பவம் தொடர்பில் சம்பூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.