முஸ்லிம்களின் விவாக சட்டத்தின் ஊடாக அடிப்படை உரிமை மீறப்படுவதாக ரதன தேரர் குற்றச்சாட்டு!

முஸ்லிம்களின் விவாக சட்டத்தின் ஊடாக அடிப்படை உரிமை மீறப்படுவதாக ரதன தேரர் குற்றச்சாட்டு!


முஸ்லிம்களின் விவாக சட்டத்தின் ஊடாக அடிப்படை உரிமை மீறப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் தெரிவிக்கின்றார்.


முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தை நீக்குவதற்கான பிரேரனை நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்டது.


இதன்படி, குறித்த பிரேரனையை முன்வைத்து உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் இவ்வாறு குறிப்பிட்டார்


இலங்கையில் வாழுகின்ற நூற்றுக்கு 10 வீதமான முஸ்லிம்களுக்கான விவாக சட்டம் உள்ளிட்ட அது சார்ந்த அனைத்து விடயங்களும், முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படுகின்றது. 


காதி நீதிமன்றக் கட்டமைப்பில், வழக்கறிஞர்களை நியமிப்பது மற்றும் அவர்களுக்கான சம்பளம் என்பன, நீதி அமைச்சினாலேயே வழங்கப்படுகின்றது. 


ஆனால் இந்த விவாக சட்டம் குறித்து, நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு ஏதேனும் தெளிவு உள்ளதா? இந்த சட்டங்கள் அமுல்படுத்தப்படுவதின் ஊடாக அடிப்படை உரிமை உள்ளிட்ட அனைத்து மனித உரிமைகளும் மீறப்படுகின்றன. இதன் ஊடாக நியாமற்ற தன்மை அமுல்படுத்தப்படுகின்றமை புலப்படுகின்றது என்றார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.