VIDEO : பௌத்த மதம் அல்லாத மற்றும் குழந்தை பாக்கியம் இல்லாதவருக்கு ஜனாதிபதியாக முடியாது என்ற சட்டம் விரைவில் - பாராளுமன்றில் அமைச்சர்
byYazh News—0
புதிய அரசியலமைப்பில் நாட்டின் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதில் புதிய திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (பொஹொட்டுவ) எம்.பி. சாமர சம்பத் தசநாயக்க இன்று பாராளுமன்றத்தில் முன்மொழிந்தார்.
$ads={2}
"தற்போதைய அரசியலமைப்பின் படி, இலங்கையில் பௌத்த திருமணமான ஒருவரே நாட்டின் ஜனாதிபதி பதவியை வகிக்க தகுதியுடையவர்கள். ஆனால் விரைவில் புதியதொரு அரசியலமைப்பு திருத்தம் வர உள்ளது. அரசியலமைப்பில் இதற்கு ஒரு திருத்தத்தை கொண்டு வர வேண்டும். பௌத்த, திருமணமான மற்றும் குழந்தைகளைப் பெற்ற ஒருவரே நாட்டின் ஜனாதிபதி பதவியை வகிக்க முடியும் என்றே யாப்பில் உள்வாங்கப்படும். குழந்தைகள் இல்லாதவர்களை நாட்டின் ஜனாதிபதியாக அனுமதிக்க முடியாது.
இப்போது உக்ரேனிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அழைத்து வரப்படுவதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டுகிறது. கொரோனா தொற்றுநோயால் உலகின் சுற்றுலாத் துறை சரிந்துள்ளது. உக்ரைன் அல்லது செவ்வாய் கிரகத்தில் இருந்து சுற்றுலாப் பயணிகள் எங்களிடம் வருகிறார்கள் என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைய வேண்டும்” என்று தெரிவித்தார்.