உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் எங்கு செல்கிறார்கள் என்று எனக்கு தெரியாது! SLTDA தலைவர் கிமர்லி பெர்னாண்டோ தெரிவிப்பு!

உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் எங்கு செல்கிறார்கள் என்று எனக்கு தெரியாது! SLTDA தலைவர் கிமர்லி பெர்னாண்டோ தெரிவிப்பு!


உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் எந்த பகுதிகளிற்கு செல்கின்றனர் என்பது தனக்கு தெரியாது என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமர்லி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


சுற்றுலாத்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.


$ads={2}


உக்ரைன் சுற்றுலாப்பயணிகள் யால மிரிச போன்ற பகுதிகளிற்கு சென்றது குறித்து ஊடகங்கள் மூலமே அறிந்து கொண்டதாக அவர் அந்தக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


சுற்றுலாப் பயணிகள் செல்லவுள்ள இடங்கள் பயன்படுத்தவுள்ள வாகனச் சாரதிகள் சுற்றுலா வழிகாட்டிகள் உட்பட அனைத்து விபரங்களையும் முன்கூட்டியே வழங்க வேண்டும் என சுற்றுலாப் பயண ஏற்பாட்டாளர்களுடன் உடன்பாடு எட்டப்பட்டிருந்தது என குறிப்பிட்டுள்ள அவர் இந்த விபரங்களை பெற முயன்றதாகவும் எனினும் அவை கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


மிரிசவில் தனியார் படகுகளை சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்துவது குறித்து தகவல்கள் கிடைத்தன என குறிப்பிட்டுள்ள அவர் யால தேசிய பூங்காவிற்குள் 28 ஜீப்களில் அவர்கள் பயணம் செய்வதையும் அறிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


எனினும் இந்த நிமிடம் வரை இந்த திட்டத்தை முன்னெடுத்தவரிடமிருந்தோ அல்லது போக்குவரத்து முகவர்களிடமிருந்தோ எந்த தகவலும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம், நாங்கள் தகவல்களை பெற முயன்ற வேளை அவர் ஜனாதிபதி செயலணியுடன் இணைந்து பணியாற்றுகின்றார் என தகவல் கிடைத்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post