கூரிய ஆயுதத்துடன் கருணா அம்மானை சந்திக்க சென்ற நபர் கைது!

கூரிய ஆயுதத்துடன் கருணா அம்மானை சந்திக்க சென்ற நபர் கைது!


கூரிய ஆயுதத்துடன் விநாயகமூர்த்தி முரளிதரனை (கருணா அம்மான்) சந்திக்கச் சென்ற நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


நேற்றைய தினம் முரசுமோட்டை பகுதியில் தங்கியிருந்த கருணாவை சந்திக்கச் சென்ற நபரைக் கடமையில் நின்ற பொலிசார் சோதனைக்குட்படுத்திய வேளை அவரிடமிருந்து குறித்த கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


$ads={2}


குறித்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிசார் குறிப்பிடுகின்றனர்.


குறித்த கத்தி மற்றும் அரிவாள் ஆகியவற்றை வயலிற்குப் பசளை இடுவதற்காக எடுத்துச் சென்றதாகவும், திரும்புகையில் கருணா சந்தித்துச் செல்ல சென்றதாகவும் குறித்த சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post