
வௌிநாட்டில் சிக்கித் தவிக்கும் இலங்கை பணியாளர்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி கட்சி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
$ads={2}
இலங்கை வௌிநாட்டு வேலை வாய்ப்பு மத்திய நிலையத்திற்கு முன்பாக இன்று (07) மாலை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்பில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
வௌிநாட்டிலுள்ள இலங்கை பணியாளர்களை அழைத்து வருவதற்கு வேலைத் திட்டம் தயாரிக்காமல் சுற்றுலா பயணிகளை அழைத்துவந்து அவர்களுக்கு அரசாங்கம் சலுகை வழங்கி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.



