
அண்மையில் ஹம்பாந்தோட்டை சூரியவெவ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் போட்டியின் போது இலங்கை கிரிக்கெட் சபை 40 மில்லியனுக்கும் அதிகமான ஹோட்டல் பில்களை செலுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் வாய்வழி பதில் கோரி இந்த விடயம் தொடர்பில் அவர் நாடாளுமன்றத்தில் பேசினார்.
$ads={2}
உணவு மற்றும் பிற செலவுகளுக்காக ஷங்கிரிலா ஹோட்டலுக்கு கிரிக்கெட் சபை சுமார் ரூ .4 கோடிக்கும் அதிகமான பில் கட்டணத்தை செலுத்தியுள்ளதாகவும், ஊவா மாகாண சபையிலிருந்து போட்டிகளுக்காக ரூ .5 கோடிக்கும் அதிகமாக செலவிட்டதாகவும் அவர் கூறினார்.
பின்னர், இந்த விடயம் தொடர்பில் ஆராய வேண்டும் என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பதிலளித்தார்.
எவ்வாறாயினும், இப் போட்டிகள் இலாபம் மட்டுமே ஈட்டியுள்ளதாகவும் இழப்பு ஏற்படவில்லை என்றும் அமைச்சர் நாமல் பொறுப்புடன் தெரிவித்தார்.